FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பங்குச் சந்தைகளில் மந்த நிலை

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மந்த நிலையே காணப்பட்டது.

22 ஜூலை 2025, 3:06 pm IST
பகிர்:

மும்பை: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மந்த நிலையே காணப்பட்டது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலருக்கான தேவை அதிகரிப்பு போன்றவற்றால் வியாழக்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு மேலும் 15 காசுகள் வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத அளவாக 70.74-இல் நிலைத்தது. வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு 70.90 வரை சென்றது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் ரூபாய் மதிப்பு மோசமான வீழ்ச்சியிலிருந்து ஓரளவுக்கு மீண்டது.
 ஆகஸ்ட் மாதத்துக்கான பங்கு  முன்பேர வணிக கணக்கு முடிப்பையொட்டியும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
இன்டஸ்இண்ட் வங்கி மற்றும் மாருதி சுஸூகி பங்கின் விலை தலா 1.62 சதவீத சரிவை சந்தித்தன. இவை தவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.57 சதவீதமும், ஏஷியன் பெயின்ட்ஸ் 1.15 சதவீதமும், யெஸ் வங்கி 1.12 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 1.07 சதவீதமும் குறைந்தன.
அதேசமயம், ஸன் பார்மா பங்கின் விலை 3.03 சதவீதம் உயர்ந்தது. 
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை  நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 32 புள்ளிகள் சரிந்து 38, 690 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 15 புள்ளிகள் குறைந்து 11,676 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments