ரூ.15 ஆயிரத்தில் 8050mAh பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! போக்கோ எஃப்9 அல்ட்ரா!
போக்கோ எஃப் 9, போக்கோ எஃப்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் செப். 1-ல் வெளியாகவுள்ளது குறித்து...
போக்கோ எஃப் 9 மற்றும் போக்கோ எஃப்9 அல்ட்ரா ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
பேட்டரி அம்சம், கேமரா, சிப்செட், வடிவமைப்பு ஆகியவற்றில் பிரீமியம் உணர்வைக் கொடுக்கும் வகையில் போக்கோ எஃப்9 வரிசை ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மூன்று வகையான பின்பக்க கேமராக்கள், டார்க் செர்ரி பழ நிறம், பிளாட் டிஸ்பிளே ஆகியவை சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்ட நிலையில், போக்கோ எஃப்9 அல்ட்ரா அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
சிறப்பம்சங்கள்
6.9 அங்குல அமோலிட் திரை கொண்டது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 185Hz திறன் உடையது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4,500 nits அதிகபட்ச திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா பிரியர்களுக்காக 200MP முதன்மை கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா வைட் கேமரா உடையது.
8,050mAh பேட்டரி திறன் உடையது.
12GB / 16GB உள் நினைவகம் (RAM) மற்றும் 256GB / 512GB நினைவக வேறுபாடுகளுடன் கிடைக்கின்றன.
இதன் ஆரம்ப மாடல் விலை ரூ. 15,000. நினைவக திறன்களுக்கு ஏற்ப ரூ.20,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
POCO F9 Pro POCO F9 Ultra smart phone with 200mp camera 8050mah battery launch onseptember
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.