FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாட்டின் முதல் ஸ்நாப்டிராகன் 5ம் தலைமுறை ஸ்மார்ட்போன்! போக்கோ எம் 8எக்ஸ் வெளியானது!

போக்கோ நிறுவனத்தில் புதிதாக எம் 8எக்ஸ் 5ஜி என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது குறித்து...

16 வினாடிகள் முன்பு
போக்கோ எம் 8எக்ஸ் 5ஜி - படம் / நன்றி - போக்கோ
பகிர்:

போக்கோ நிறுவனத்தில் புதிதாக எம் 8எக்ஸ் 5ஜி என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

அதீத பேட்டரி திறன், சிறப்பு தெர்மல் மேனேஜ்மென்ட், சிலிகான் மற்றும் மென்பொருள் மேம்பாடு நீட்டிப்பு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போக்கோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையில் மத்திய தர ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

Advertisement

Advertisement

அந்தவகையில் தற்போது நிறைவான அம்சங்களுடன் ரூ. 20,999 விலையில் எம் 8எக்ஸ் 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • போக்கோ எம் 8எக்ஸ் 5ஜி ஸ்மார்போன் 6.9 அங்குல எச்.டி. திரை உடையது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.

  • ஸ்நாப்டிராகன் 4, 5 ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.

  • கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • 7900mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 4GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 18,999.

  • 6GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,999.

  • வங்கியில் ரூ. 2,000 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.

  • போக்கோ கிளைகளிலும் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் போக்கோ எம் 8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

summary

Tech news POCO M8x 5G smart phone Launched in India 7900mAh Battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments