சோனி எக்ஸ்பீரியாவில் புதிய ஸ்மார்ட்போன்! நாளை வெளியாகிறது
சோனி எக்ஸ்பீரியா 10 VIII ஸ்மார்ட்போன் நாளை (ஆக. 25) சந்தையில் அறிமுகமாகவுள்ளது குறித்து...
சோனி எக்ஸ்பீரியா 10 VIII என்ற ஸ்மார்ட்போன் நாளை (ஆக. 25) இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இதனையொட்டி இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சோனி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் நம்பிக்கை மிகுந்த இடம் நீடித்துவருகிறது.
சோனி எக்ஸ்பீரியா 10 VIII சிறப்பம்சங்கள்
Advertisement
Advertisement
சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் ஸ்நாப்டிராகன் 6, 3 ஆம் தலைமுறை சிப்செட் கொண்டது.
8ஜிபி உள்நினைவகம், 256 ஜிபி நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது.
தனியாக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்டிராய்டு 16 இயங்குதளம் உடையது. ஆன்டிராய்டு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா பிரியர்களுக்காக பின்புறம் 200 எம்பி முதன்மை கேமரா, 50 எம்பி துணை கேமரா கொண்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக 32எம்பி கேமரா முன்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.
6000 எம்ஏஎச் பேட்டரி அல்லது 6500எம்ஏஎச் பேட்டரி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என சோனி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வைஃபை 6, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள்
கருப்பு, வெள்ளை, ஊதா, மஞ்சள் ஆகிய நிறங்களில் இந்த புதிய சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tech news Sony Xperia 10 VIII smart phone Specifications leaked
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.