டெக்னோ ஸ்மார்ட்போனில் சோனி கேமரா! அறிமுகமாகிறது போவா 8 ப்ரோ!
டெக்னோ நிறுவனத்தின் போவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது குறித்து...
டெக்னோ நிறுவனத்தின் போவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகமாகவுள்ளது.
50MP சோனி கேமாரா, 6500mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன. தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ள போவா 8 ஸ்மார்ட்போனின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் விலை குறித்துக் காணலாம்.
சீனாவைச் சேர்ந்த டெக்னோ நிறுவனம் இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையிலான போன்களை தயாரித்து பிரபலமானது. தற்போது இந்நிறுவனம் பிரீமியம் பயனர்களை கவரும் வகையிலான தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
தற்போது வெளியாகியுள்ள போவா 8 ப்ரோ, பிரீமியம் பயனர்களைக் கவரும் வகையிலான சிறப்புகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதன் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 46,999. நினைவக திறனைப் பொருத்து விலையில் மாற்றங்கள் இருக்கலாம்.
டெக்னொ போவா 8 ப்ரோ சிறப்புகள்
6.78 அங்குல அமோலிட் திரை கொண்டது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொண்டது.
டைமன்சிட்டி 7400 அல்டிமேட் புராசஸர் உடையது.
டெக்னோ பி1 சிப்செட் கொண்டது.
6500mAh பேட்டரி திறன், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் உடையது.
கேமரா பிரியர்களுக்காக பின்புறம் சோனி சென்சாருடன் கூடிய 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 13MP கேமரா உள்ளது.
சைபர் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் வடிவமைப்பு.
டால்பி அட்மாஸ் டுயல் ஸ்பீக்கர் கொண்டது.
12GB + 512GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 54,999
8GB + 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 49,999
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.