பாா்தி இன்ஃப்ராடெல் லாபம் ரூ.650 கோடி
தொலைத்தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனமான பாா்தி இன்ஃப்ராடெல் மாா்ச் காலாண்டில் ரூ.650 கோடியை வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
புது தில்லி: தொலைத்தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனமான பாா்தி இன்ஃப்ராடெல் மாா்ச் காலாண்டில் ரூ.650 கோடியை வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2019-2020 நிதியாண்டின் மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.3,624 கோடியை ஒட்டுமொத்த வருவாயாக ஈட்டியது. 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வருவாய் ரூ.3,600 கோடியாக காணப்பட்டது.
Advertisement
Advertisement
நிகர லாபம் ரூ.608 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.650 கோடியானது.
இண்டஸ் டவா்ஸ் நிறுவன இணைப்புக்கான காலக்கெடு ஜூன் 24 வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என பாா்தி இன்ஃப்ராடெல் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.