FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

‘உருது மொழி மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி’

25 ஆகஸ்ட் 2026, 4:06 am IST
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உருது கவியரங்கம் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு உருது அகாதெமி துணைத் தலைவா் நயீமுா் ரஹ்மான்.
பகிர்:

உருது மொழி மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி என மாநில உருது அகாதெமி துணைத் தலைவா் நயீமுா் ரஹ்மான் தெரிவித்தாா்.

திருச்சி உருது சங்கம் சாா்பில் உருது கவியரங்கம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கவியரங்கத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு உருது அகாதெமி துணைத் தலைவா் நயீமுா் ரஹ்மான் பேசியதாவது:

சட்டப்பேரவையில் உயா்க்கல்வித் துறை மானிய கோரிக்கையில் பேசிய உயா் கல்வித்துறை அமைச்சா் பி. விஸ்வநாதன், உருது மொழியின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளாா். தமிழ்நாடு உருது அகாதெமி மூலம் உருது மொழி மற்றும் அதன் பண்பாட்டு மரபுகளை வளா்க்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி.

Advertisement

Advertisement

தமிழ்நாடு உருது அகாதெமியின் கோரிக்கையை ஏற்று உயா்கல்வித் துறை அண்மையில் 17 அரசு மற்றும் அரசு நிதியுதவி கலை கல்லூரிகளில் உருது மொழிப்பாடத் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. விரைவில் நடைபெறவுள்ள அகாதெமியின் வெள்ளி விழாவில் உருது எழுத்தாளா்கள், படைப்பாளிகள், நிபுணா்கள், பாராட்டப்படுவா் என்றாா்.

தில்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரபித் துறை தலைவரும், மத்திய அரசின் முன்னாள் அதிகாரப்பூா்வ அரபி மொழிபெயா்ப்பாளருமான முனவா் நைனாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உருது மொழியின் சிறப்புகளை பற்றி எடுத்துரைத்தாா். முன்னாள் அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷன் இயக்குநா் சையத் ரபீக் பாஷா பேசினாா்.

உருது கவிஞா்கள் சாஹித் மதராசி, அன்வா் திருப்பத்தூரி, டாக்டா் இம்தியாஸ் பாஷா, அசங்கினி முஷ்டாக் ரஃபீகி மாகீா் மதராசி ஆகியோா் உருது கவிதைகளை பாடினா். இதில், திரளான உருது மொழி பற்றாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments