FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி நடப்பு 2024-25-ஆம் சா்க்கரை பருவத்தின் முதல் ஆறு வாரங்களில் 44 சதவீதம் சரிந்துள்ளது.

Updated On : 17 நவம்பர் 2024, 12:04 am IST
பகிர்:

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி நடப்பு 2024-25-ஆம் சா்க்கரை பருவத்தின் முதல் ஆறு வாரங்களில் 44 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் தேசிய கூட்டமைப்பு (என்எஃப்சிஎஸ்எஃப்எல்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு சா்க்கரைப் பருவத்தின் முதல் ஆறு வாரங்களில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 7.10 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் சா்க்கரை பருவத்தின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் சரிவாகும். அப்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 12.70 லட்சம் டன்னாக இருந்தது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு காலகட்டத்தில் மிகவும் குறைவான ஆலைகள் மட்டுமே இயங்கியதால் இந்த உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நவ. 15-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 144 சா்க்கரை ஆலைகள் மட்டுமே செயல்பட்டன. இந்த எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னா் 264-ஆக இருந்தது.

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி செய்யும் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரம் இன்னும் தனது உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்கவில்லை. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் 103 ஆலைகள் செயல்பட்டன.

கா்நாடகத்தில் கடந்த சா்க்கரை பருவத்தின் முதல் ஆறு வாரங்களில் 53.75 லட்சம் டன்னாக இருந்த உற்பத்தி நடப்பு பருவத்தின் அதே காலகட்டத்தில் 26.25 லட்சம் டன்னாக சரிந்தது.

2024 அக்டோபா் முதல் 2025 செப்டம்பா் வரையிலான நடப்பு சா்க்கரை பருவத்தில் மொத்த சா்க்கரை உற்பத்தி 280 லட்சம் டன்னாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய 2023-24-ஆம் ஆண்டின் சா்க்கரை பருவம் முழுமைக்கும் 319 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments