FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிரேட்டர் நொய்டாவில் ஏலம் மூலம் 560 வீடுகள் விற்பனை!

அரசுக்கு சொந்தமான என்.பி.சி.சி இந்தியா லிமிடெட் நிறுவனமானது கிரேட்டர் நொய்டாவில் உள்ள 560 குடுயிறுப்புகளை மின்னணு மூலம் ஏலம் விட்டதில் ரூ.1,153 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

11 ஏப்ரல் 2025, 7:56 pm
NBCC - கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான என்.பி.சி.சி இந்தியா லிமிடெட் நிறுவனமானது கிரேட்டர் நொய்டாவில் உள்ள 560 குடுயிறுப்புகளை மின்னணு மூலம் ஏலம் விட்டதில் ரூ.1,153 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் (மேற்கு) உள்ள 'ஆஸ்பயர் டிரீம் வேலி-யில்' 560 குடியிருப்புகளை இ-ஏலத்தின் மூலம் விற்பனை செய்ததில் சுமார் ரூ.1,153.13 கோடி ஈட்டியுள்ளதாக என்.பி.சி.சி இந்தியா தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதில் விற்பனை மதிப்பில் 1 சதவிகிதம் சந்தைப்படுத்தல் கட்டணம் என்.பி.சி.சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) கிரேட்டர் நொய்டாவில் இ-ஏலம் மூலம் 1,185 குடியிருப்புகளை ரூ.1,504.69 கோடிக்கு விற்பனை செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்கி கடன் செலுத்துதல் உள்பட தற்போதைய பல்வேறு திட்டங்களுக்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என்று நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.