தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!
தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம் பற்றி...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த வார இறுதியில் ரூ. 74,000-ஐ எட்டிய ஆபரணத் தங்கம், இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றத்தைக் கண்டது. ஒரு சவரன் திங்கள்கிழமை ரூ. 74,360, செவ்வாய்க்கிழமை ரூ. 74,960 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
புதன்கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ. 75,000-ஐ கடந்து விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையும் ஒரு சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கத்தின் விலை எட்டியுள்ளது. ஒரு கிராம் ரூ. 9,400 -க்கும் ஒரு சவரன் ரூ. 75,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வரலாறு காணாத விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 1 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 127 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,27,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of gold jewelry in Chennai reached an all-time high on Thursday morning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.