ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!
ஓஸ்வால் பம்ப்ஸ் நிறுவனம், பிரதமர் குசும் (PM-KUSUM) திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தில் ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்றுள்ளதாக இன்று அறிவித்தது.
புதுதில்லி: ஓஸ்வால் பம்ப்ஸ் நிறுவனம், பிரதமர் குசும் (PM-KUSUM) திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தில் ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்றுள்ளதாக இன்று அறிவித்தது.
இந்த திட்டத்தின் 'பி' பிரிவின் கீழ், மகாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளதாக ஓஸ்வால் பம்ப்ஸ் தெரிவித்தது.
பிஎம் குசும் பி திட்டத்தின் கீழ், ஒரு வருடத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டிய கூடுதல் 6,500 ஆஃப்-கிரிட் சூரிய ஒளி நீர் இறைக்கும் அமைப்புகளுக்கான தகுதி சான்றிதழை மகாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக ஓஸ்வால் பம்ப்ஸ் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அதே வேளையில் 6,500 சூரிய ஒளி நீர் இறைக்கும் அமைப்புகளின் மொத்த மதிப்பு, ஜிஎஸ்டி உள்பட சுமார் ரூ.180 கோடி என்றது.
2019ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியன் திட்டமானது, மார்ச் 2026 க்குள் 34,800 மெகாவாட் சூரிய சக்தியை அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.