முகப்பு
வணிகம்

2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்

2025 - 26 நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் சராசரியாக 4.3 - 4.7% ஆக நிலைப்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்.

Updated On : 13 ஜனவரி 2025, 11:09 am IST
மாதிரிப் படம்
பகிர்:

2025 - 26 நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் சராசரியாக 4.3 - 4.7% ஆக நிலைப்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிப் பங்கு முதலீட்டு நிபுணர்களைக் கொண்ட பி.எல். கேப்பிடல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உணவுப் பொருள்களின் விலை சீராகவும் விவசாய உற்பத்தி நிலையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எல். கேப்பிடல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''உணவு பணவீக்கம் காரணமாக 2024-ஆம் ஆண்டில் உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் அதிகமாக இருந்தது.

Advertisement

Advertisement

2024-ல் பணவீக்கம் அதிகரித்ததற்கு காலநிலை மாற்றம், வெப்ப அலை, கடுமையான மழைப்பொழிவு, விவசாய விளைச்சல் பாதிப்பு ஆகியவை விலை ஏற்றத்துக்கு காரணங்களாக அமைந்தன.

ஆனால், 2025-ல் உணவுப் பொருள்களின் விலையை சீராக்க விவசாய உற்பத்தி, ராபி பயிர் உற்பத்தி ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும்.

நாட்டின் பணவீக்கத்தை 2 - 6 சதவீதத்தில் இருக்குமாறு கவனித்துக்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

2024-ல் நுகர்வோர் விலைக் குறியீடு 6 சதவீதத்தை எட்டியது. உணவு பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு இரட்டை இலக்கமாக அதிகரித்தது. இது இறக்குமதிகளிலும் சமையல் எண்ணெய்களிலும் பிரதிபலித்தது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பணவியல் கொள்கை மாற்றங்களும் உணவுப் பொருள்களின் விலையை சீராக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.