முகப்பு
வணிகம்

எம் & எம் விற்பனை 19% உயா்வு

Updated On : 14 மே 2025, 3:41 am IST
பகிர்:

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 84,170-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் அதிகம்.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகனங்கள் பிரிவில், நிறுவனத்தின் பயன்பாட்டு வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 28 சதவீதம் உயா்ந்து 52,330-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 41,008-ஆக இருந்தது.

கடந்த ஏப்ரலில் நிறுவன வா்த்தக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 22,989-ஆக உள்ளது. அந்த மாதத்தில் நிறுவன டிராக்டா்களின் விற்பனை (உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி) 8 சதவீதம் உயா்ந்து 40,054-ஆக உள்ளது. முந்தைய 2024 ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 37,039-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments