ஐபோன் 17 வாங்க சிறந்த இணைய விற்பனை தளம் எது? எவ்வளவு தள்ளுபடி?
குறைந்த விலையில் ஐபோன் 17 வாங்குவதற்கு ஏற்ற இணைய விற்பனை தளம் எது என்பது குறித்து...
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ஐபோன் பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ. 1.5 லட்சம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. சலுகை விலையில் வாங்க பல்வேறு இணைய விற்பனை தளங்கள் முன்வந்துள்ளன.
எந்தவொரு விழாக்கால சலுகைகள் இல்லாதபோதும் கூட விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற விற்பனை தளங்களில் ஐபோன் 17 விலை குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ. 82,900. விஜய் சேல்ஸ் விற்பனை தளத்தில் ரூ. 2,510 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 80,390க்கு ஐபோன் 17-ஐ பெறலாம்.
எச்டிஎஃப்சி வங்கிக் கடன் அட்டை மூலம் ரூ. 4000 தள்ளுபடி பெறலாம். பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் கூடுதலாக ரூ. 4500 வரை கூடுதலாக தள்ளுபடி பெறலாம்.
ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் எந்தவிதமான வங்கிக் கடன் அட்டை, பழைய ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் போன்ற தள்ளுபடிகள் இல்லை. ஆனால் ஐபோன் 17 விலை மட்டும் சற்று குறைத்து ரூ.80,990க்கு விற்கப்படுகிறது.
இதேபோன்று ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளப் பக்கத்தில் ரூ. 78,900.
குரோமா இணைய விற்பனை தளத்தில் ரூ. 82,900
ஆப்பிள் கிளைகளில் ரூ. 82,900.