சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ஃபிளிப்கார்ட்டின் சுதந்திர தின சலுகைகள்!
ஆகஸ்ட் மாதத்தையொட்டி சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு ஃபிளிப்கார்ட் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது குறித்து...
ஆகஸ்ட், சுதந்திர தின மாதத்தையொட்டி ஃபிளிப்கார்ட் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த சலுகை தொடங்குவதாக ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்26, எஸ்25, ஏ57 உள்ளிட்ட உயர்ரக ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களே அறிமுகமான நிலையில், இந்த சுதந்திர தின சலுகை மத்திய ரகப் பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுமட்டுமின்றி இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக உள்ள சாம்சங்கில் ஸ்மார்ட்போன் எடுக்க விருப்பம் உடையவர்கள் இச்சலுகையை பயன்படுத்துக்கொள்ளலாம்.
எந்தெந்த மாடல்களுக்கு சலுகை?
சாம்சங் கேலக்ஸி எஸ் 26 ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ. 87,999. சுதந்திரதின மாத சலுகையாக ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ. 79,999-க்கு கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ. 1,39,999. எனினும் ஃபிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ. 1,30,999 ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்போன் அறிமுக விலை ரூ. 74,999. ஃபிளிப்கார்ட் சலுகையாக ரூ. 59,999-க்கு கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 25 பிளஸ் அறிமுக விலை ரூ. 99,999. சலுகை விலையில் ரூ. 79,999க்கு கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ் அறிமுக விலை ரூ. 1,09,999. சலுகை விலையில் ரூ. 69,999-க்கு கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எஃப்.இ. அறிமுக விலை ரூ. 59,999. சலுகை விலையில் ரூ. 47,999-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 57 அறிமுக விலை ரூ. 58,999. சலுகை விலையில் ரூ. 51,499-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ37 அறிமுக விலை ரூ. 45,999. சலுகை விலையில் ரூ. 36,499-க்கு விற்பனையாகவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ36 அறிமுக விலை ரூ. 42,999. சலுகை விலையில் ரூ. 26,999-க்கு விற்பனையாகவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்70இ அறிமுக விலை ரூ. 18,999. சலுகை விலையில் ரூ. 14,999-க்கு விற்பனையாகவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்70 அறிமுக விலை ரூ. 11,999. சலுகை விலையில் ரூ. 11,399-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
Flipkart Freedom Sale 2026 big discounts on : Galaxy S26, S25, A57 and more
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.