டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.40 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ. 95.40 ஆக நிறைவு.
புதுதில்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தை சரிவு ஆகியவற்றால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ. 95.40 ஆக நிறைவடைந்தன.
டாலரின் மதிப்பு வலுவடைந்ததால், உள்நாட்டில் ரூபாய் மீதான அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் சமீபத்திய வெளிநாட்டு முதலீட்டு வரத்து, இந்த சரிவைக் கட்டுப்படுத்த உதவியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூ. 95.35 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, நாள் முழுவதும் ரூ. 95.25 முதல் ரூ. 95.42 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் நிலையை விட 3 காசுகள் சரிந்து ரூ. 95.40 ஆக நிறைவடைந்தன.
Advertisement
Advertisement
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 95.37 ஆக நிறைவடைந்தன.
The rupee slipped 3 paise to close at 95.40 against the US dollar on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.