FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

போஷ் நிகர லாபம் 36.8% சரிவு!

போஷ் லிமிடெட், முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 36.8% சரிந்து ரூ. 704.9 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 9:14 pm IST
பகிர்:

புதுதில்லி: தொழில்நுட்பம் மற்றும் சேவை நிறுவனமான போஷ் லிமிடெட், ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 36.8 சதவீதம் சரிந்து ரூ. 704.9 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 1,115.3 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் விடியோ தீர்வுகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஆகிய பிரிவில் விற்பனை செய்ததன் மூலம் நிறுவனம் ரூ. 556 கோடி லாபத்தைப் பதிவு செய்தது.

முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 5,841.9 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 4,788.6 கோடியாக இருந்தது. ஆய்வுக்கு உட்பட்ட காலாண்டில் மொத்தச் செலவுகள் ரூ. 5,125.8 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 4,238.8 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

முதல் காலாண்டில், வாகனத் துறையின் ஒட்டுமொத்த தயாரிப்பு விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 25.7 சதவீதம் அதிகரித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன சந்தையின் வலுவான வளர்ச்சியின் காரணமாக, நிறுவனத்தின் 'பவர் சொல்யூஷன்ஸ்' வணிகப் பிரிவும் 29% வளர்ச்சி கண்டுள்ளது.

நிறுவனத்தின் இருசக்கர வாகன வணிகப் பிரிவு 41.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. லூப்ரிகண்ட், ஸ்பார்க் பிளக் உள்ளிட்ட முக்கிய தயாரிப்புகளுக்கான வலுவான தேவை காரணமாக, 'மொபிலிட்டி ஆஃப்டர்மார்க்கெட்' வணிகமும் 9.6 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

இதனிடையே, பவர் டூல்ஸ் பிரிவின் முக்கிய தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்ததன் மூலம், 'பியாண்ட் மொபிலிட்டி' வணிகத்தின் நிகர விற்பனை, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

summary

Bosch Ltd reported a 36.8 per cent decline in consolidated net profit to Rs 704.9 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments