FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி-யின் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் தனது நிகர லாபம் 36 சதவீதம் சரிந்து ரூ. 533 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

Updated On : 22 ஜூலை 2026, 7:59 pm IST
JSW Energy
பகிர்:

புதுதில்லி: ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் தனது நிகர லாபம் 36 சதவீதம் சரிந்து ரூ. 533 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது. இதுவே கடந்த வருடம் ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 836 கோடியாக இருந்தது.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் அல்லது நிகர லாபம் ரூ. 533 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 36 சதவீதம் குறைவு. இதற்கு முக்கியக் காரணங்களாக நிதி மற்றும் தேய்மானச் செலவுகளாக அமைந்தன.

புதிய உற்பத்தித் திறன்கள் செயல்பாட்டுக்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தேய்மானச் செலவானது 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த ரூ. 739 கோடியிலிருந்து, 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 890 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

நடைபெற்று வரும் உற்பத்தித் திறன் விரிவாக்கப் பணிகளுக்கு நிதியளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கூடுதல் கடன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,306 கோடியாக இருந்த செலவுகள், இக்காலாண்டில் ரூ. 1,519 கோடியாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், கடன் மீதான சராசரி வட்டி விகிதம் 8.36 சதவீதமாக உள்ளது.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் மேற்கொண்ட நிதி திரட்டல் நடவடிக்கைகளின் விளைவாக, நிகரக் கடன் அளவு ஜூன் 30, 2026 அன்று ரூ. 61,322 கோடியாகக் குறைந்துள்ளது.

ஜூன் 30, 2026 நிலவரப்படி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர மதிப்பு ரூ. 36,161 கோடியாக இருந்தது. அதே வேளையில், மொத்த வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய மாற்றமின்றி ரூ. 5,437 கோடியாக இருந்தது.

summary

JSW Energy reported a 36 per cent decline in its net profit to Rs 533 crore in the June quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments