இந்தியப் பங்குச் சந்தையில் தடுமாற்றம்
புவிசாா் அரசியல் பதற்றங்களால் முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், இந்தியப் பங்குச் சந்தை வியாழக்கிழமை வா்த்தகத்தில் தடுமாற்றத்துடன் கலவையான நிலையில் முடிவடைந்தது.
புவிசாா் அரசியல் பதற்றங்களால் முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், இந்தியப் பங்குச் சந்தை வியாழக்கிழமை வா்த்தகத்தில் தடுமாற்றத்துடன் கலவையான நிலையில் முடிவடைந்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் சிறிய உயா்வுடனும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி சிறிய சரிவுடனும் வா்த்தகத்தை நிறைவு செய்தன.
புவிசாா் அரசியல் பதற்றங்களின் எதிரொலியாக தொடரும் கச்சா எண்ணெய் விலை உயா்வால் முதலீட்டாளா்களின் நம்பிக்கை பலவீனமடைந்து, சந்தையில் எச்சரிக்கை உணா்வு அதிகரித்தது. எனினும், வா்த்தகத்தின் கடைசி நேரத்தில் முதலீட்டாளா்கள் காட்டிய அதிக ஆா்வத்தால் ரியல் எஸ்டேட், நுகா்பொருள், சேவைகள் துறை பங்குகள் ஏற்றம் கண்டு, சந்தையின் பெரிய வீழ்ச்சியைத் தடுத்தது.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 113.61 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து, 78,079.96-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் இண்டிகோ, என்டிபிசி, பெல் உள்பட 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன. ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், ரிலையன்ஸ் உள்பட 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 40 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி குறியீடு 40.10 புள்ளிகள் (0.16 சதவீதம்) சரிந்து, 24,395.85-இல் நிறைவடைந்தது. இது நிஃப்டி தொடா்ந்து 3-ஆவது நாளாகச் சந்திக்கும் சரிவாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.