FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரீநியூ லாபம் 16% அதிகரிப்பு!

ரீநியூ எனர்ஜி நிறுவனத்தின், வருவாய் அதிகரித்ததை தொடர்ந்து, நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 16 சதவீதம் அதிகரிப்பு.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 11:10 pm IST
ரீநியூ எனர்ஜி
பகிர்:

புதுதில்லி: ரீநியூ எனர்ஜி குளோபல் நிறுவனத்தின், வருவாய் அதிகரித்ததை தொடர்ந்து, நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 595.3 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று அறிவித்தது.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிகர லாபம் ரூ. 595.3 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ. 513.1 கோடியாக இருந்தது.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 4,786.4 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ. 4,118.2 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

மின்சார விற்பனை மூலம் கிடைத்த வருவாய், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 2,674.9 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ. 2,547.3 கோடியாக இருந்தது.

சூரிய ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்து விற்பனை செய்ததில் கிடைத்த வருவாய் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,677.7 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது ரூ. 1,322.3 கோடியாக இருந்தது.

ஜூன் 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்தத் திறன் 20.5 ஜிகாவாட்டாக இருந்தது. அதே வேளையில், ஜூன் 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் ஆண்டுக்கு ஆண்டு 17% அதிகரித்து 13.1 ஜிகாவாட்டை எட்டியது.

இதனைத் தொடர்ந்து, நிறுவனம் 466 மெகாவாட் சூரிய ஆற்றலைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தது. 2027 மார்ச் முடிய உள்ள நிதியாண்டுக்குள் 1.6 முதல் 2.4 ஜிகாவாட் வரையிலான திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய நிறுவனம் தொடர்ந்து திட்டமிட்டுள்ளது.

summary

ReNew Energy Global posted a 16 per cent year-on-year rise in its net profit to Rs 595.3 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments