அப்பல்லோ மருத்துவமனை லாபம் 38.4% உயர்வு!
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், அதன் லாபம் 38.4% அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.
புதுதில்லி: அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 38.4 சதவீதம் அதிகரித்து ரூ. 610.4 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 441 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்ததாக தெரிவித்தது.
முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட ஒருங்கிணைந்த வருவாய் ரூ. 7,043.5 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 5,842.1 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
ஆய்வுக்கு உட்பட்ட காலாண்டில் மொத்தச் செலவுகள் ரூ. 6,306.9 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 5,313.2 கோடியாக இருந்தது.
முதல் காலாண்டில், சுகாதாரச் சேவைகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 3,619.5 கோடியாக இருந்தது. அதே வேளையில், டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் மருந்தக விநியோகப் பிரிவின் வருவாய் ரூ. 2,977 கோடியாக அதிகரித்தது. அதே வேளையில், சில்லறை பிரிவில் அதன் வருவாய் ரூ. 499.5 கோடியாக உள்ளதாக தெரிவித்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ. 435.1 கோடியாக இருந்தது.
Apollo Hospitals Enterprise Ltd reported a 38.4 per cent rise in consolidated profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.