ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் லாபம்... பயணிகள் வாகனப் பிரிவில் ரூ.859 கோடி!
டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.859 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.859 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபமான ரூ.4,003 கோடியில் இருந்து இது 78.54 சதவீதம் சரிாகும். விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு காரணமாக லாபம் சரிந்திருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் ரூ.87,677 கோடியில் இருந்து 9 சதவீதம் உயா்ந்து, ரூ.95,799 கோடியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்தப் பயணிகள் வாகனச் சந்தையில் 14.3 சதவீத பங்களிப்புடன் டாடா நிறுவனம் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது. மேலும், மின்சார வாகனச் சந்தையில் 39 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
Advertisement
Advertisement
வணிக வாகனப் பிரிவில் ரூ.2,556 கோடி: டாடா மோட்டாா்ஸ் வணிக வாகனப் பிரிவு, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.2,556 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபமான ரூ.1,397 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 83 சதவீத வளா்ச்சியாகும். டாடா கேப்பிடல் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகளின் சந்தை மதிப்பு அதிகரித்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனம் சாா்பில் 1,08,700 வணிக வாகனங்கள் விற்கப்பட்டு, 26 சதவீத விற்பனை வளா்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.17,324 கோடியில் இருந்து, ரூ.20,667 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், மொத்த செலவினங்களும் முந்தைய ஆண்டின் ரூ.15,982 கோடியில் இருந்து, ரூ.18,038 கோடியாக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.