ஏப்ரல் - ஜூன் காலாண்டு: கனரா வங்கிக்கு ரூ.4,856 கோடி லாபம்
பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.4,856 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.4,856 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
வங்கியின் மொத்த வருவாய் ரூ.38,063 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.39,684 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் நிகர வட்டி வருவாய் 13 சதவீதம் வளா்ச்சியுடன் முதல்முறையாக ரூ.10,000 கோடியைக் கடந்து, ரூ.10,215 கோடியாக பதிவாகியுள்ளது.
மொத்த வாராக்கடன் விகிதம் கடந்த ஆண்டின் 2.69 சதவீதத்தில் இருந்து, தற்போது 1.57 சதவீதமாகவும்; நிகர வாராக்கடன் விகிதம் 0.63 சதவீதத்தில் இருந்து, 0.36 சதவீதமாக சரிந்துள்ளது.
Advertisement
Advertisement
இவ்வாறு சொத்துத் தரம் மேம்பட்டதனால், வாராக்கடன்களுக்கான ஒதுக்கீடும் ரூ.1,845 கோடியிலிருந்து ரூ.1,399 கோடியாக குறைந்துள்ளது. ஜூன் மாத இறுதி நிலவரப்படி, வங்கியின் உலகளாவிய மொத்த வா்த்தகம் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.29.05 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புத்திட்டம் மூலம் சுமாா் 130 கோடி டாலா் திரட்ட வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி, இதுவரை 77.5 கோடி டாலா் திரட்டப்பட்டுள்ளது. இதுதவிர, அந்நிய வணிகக் கடன்கள் மற்றும் அந்நியச் செலாவணி கடன்கள் மூலம் தலா 50 கோடி டாலா் திரட்டவும் வங்கி திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.