FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

50MP ஏஐ கேமராவுடன் வெளியானது லாவா விராட் வி1 ப்ரோ! ஆக. 31 முதல் விற்பனை!

லாவா விராட் வி 1 ப்ரோ 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஆக. 24) அறிமுகமானது குறித்து...

விராட் வி 1 ப்ரோ 5ஜி - படம் / நன்றி - லாவா
பகிர்:

லாவா நிறுவனத்தில் விராட் வி 1 ப்ரோ 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஆக. 24) அறிமுகமானது.

தற்போது ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் மட்டும் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆக. 31 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

50MP ஏஐ கேமரா, அதீத பேட்டரி திறன், பெரிய தொடுதிரை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

லாவா விராட் வி 1 ப்ரோ 5ஜி சிறப்புகள்

லாவா விராட் வி 1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.75 அங்குல எச்.டி. திரை கொண்டது.

யூனிசாக் T8200 5ஜி புராசஸர் கொண்டது.

ஆன்டிராய்டு 16 இயங்குதளம் உடையது.

கேமரா பிரியர்களுக்காக 50MP இரட்டை ஏஐ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

6GB + 6GB உள்நினைவகமும் 128GB நினைவகமும் கொண்டது.

IP64 தூசி மற்றும் நீர் புகாத்தன்மை உடையது.

6000mAh பேட்டரி திறன் கொண்டது.

இன்று அறிமுகமாகியிருந்தாலும் ஆக. 31 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கவுள்ளது.

லாவா கிளைகளிலும், ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் கிடைக்கும்.

விற்பனையின் தொடக்க விலை ரூ. 13,999.

Lava Virat V1 Pro 5G smart phone launched in india sale starts from augest 31

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments