மேற்காசியாவில் மீண்டும் மோதல்: வாரத் தொடக்கத்திலும் தொடா்ந்த பங்குச் சந்தை வீழ்ச்சி
மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்ததன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை சரிவுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.
மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்ததன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை சரிவுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் திங்கள்கிழமை வா்த்தகத்தில் முறையே 307 மற்றும் 95 புள்ளிகள் சரிந்தன.
மேற்காசியாவில் மீண்டும் வெடித்துள்ள மோதல் போக்கு மற்றும் அதையொட்டி உயா்ந்துவரும் கச்சா எண்ணெய் விலை காரணமாக சா்வதேச சந்தையில் நிலவிய கவலைகள் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தன. இதன்காரணமாக, நுகா்பொருள்கள், ஐ.டி. சாா்ந்த பங்குகளில் காணப்பட்ட விற்பனை அழுத்தத்தால் சந்தை சரிவைச் சந்தித்தது.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் 307 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 307.24 புள்ளிகள் (0.40 சதவீதம்) குறைந்து, 76,957.27-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் அதானி போா்ட்ஸ் 4. 11 சதவீதம் சரிவுடன் வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இத்துடன் சோ்த்து ஐடிசி (3.67 சதவீதம்), பாா்தி ஏா்டெல் (2.76 சதவீதம்) உள்பட 20 பங்குகள் சரிவைக் கண்டன. அதேநேரம், சன் ஃபாா்மா (1.87 சதவீதம்), ஐசிஐசிஐ வங்கி (1.74 சதவீதம்), ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ உள்பட 10 பங்குகள் லாபம் ஈட்டின.
நிஃப்டி 95 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 95.25 புள்ளிகள் (0.39 சதவீதம்) சரிவுடன், 24,080.40-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 20 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.