ரூ. 40 ஆயிரத்திற்குள் சிறந்த மடிக்கணினிகள் எவை?
பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் கூடிய சிறந்த மடிக்கணினிகளின் பட்டியல் குறித்து...
மின்னணு சந்தையில் ரூ.40,000க்குள் சிறந்த மடிக்கணினிகள் கிடைக்கின்றன.
மடிக்கணினி (லேப்டாப்) வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், எது சிறந்தது என்ற குழப்பம் எழுவது இயல்பானது.
அவர்கள் குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில் ரூ. 40 ஆயிரத்திற்குள் அதாவது பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் கூடிய சிறந்த மடிக்கணினிகள் எவை என்பது குறித்து காணலாம்.
Advertisement
Advertisement
ரூ. 40 ஆயிரத்திற்குள் வாங்குவதால், செயல்திறனில் சமரசம் செய்துகொள்ளும் வகையில் இருக்குமோ என அஞ்ச வேண்டாம். டெல், ஹெச்.பி., லெனோவோ, ஏசஸ் மற்றும் ஏசர் போன்ற முன்னணி நிறுவனங்களிலேயே இந்த விலையில் மடிக்கணினிகள் கிடைக்கின்றன.
ஏசர் ஸ்மார்ட் சாய்ஸ் ஏஸ்பையர் ஒன் (Acer Smartchoice Aspire One)
ஏசர் நிறுவனத்தின் ஏஸ்பையர் ஒன் ஏஎம்டி 7320யு புராசஸர் உடையது. 8GB உள்நினைவகம் (RAM) 256GB நினைவகம் உடையது. 14 அங்குல திரையுடன் விண்டோஸ் 11 இயங்குதளம் கொண்டது. இதன் எடை 1.4 கிலோ.
இதன் வடிவமைப்பு மிகவும் ஒல்லியாகவும் வெளியே எடுத்துச் செல்லும் வகையில் எடை குறைவானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 36,990.
ஹெச்.பி., 15 (HP 15 2026)
ஹெச்.பி., மடிக்கணினியானது 7120U புராசஸர் கொண்டது. 8GB உள்நினைவகம் மற்றும் 512GB நினைவகம் கொண்டது. 15.6 அங்குல எச்.டி., திரை, ஏஎம்டி 610M கிராபிக்ஸ் அட்டை மற்றும் விண்டோஸ் 11 இயங்குதளம் உடையது. 1.5 கிலோ எடை கொண்டது. ஏஐ வசதியுடன் கோ பைலட் ஆப்ஷனும் உள்ளது. இதன் விலை ரூ. 39,880.
ஹெச்.பி., 255ஆர் ஜி10 நோட்புக்
இந்த மடிக்கணினி ஏஎம்டி அத்லான் சில்வர் 7120U புராசஸர் உடையது. 8GB உள்நினைவகம் (RAM) 512GB நினைவகம் கொண்டுள்ளது. 15.6 அங்குல எச்.டி. திரையுடன் எதிரொலிக்காத வண்ணம் ஆன்டி கிளார் அம்சம் கொண்டது.
இது வேலை செய்பவர்களுக்கு ஏற்றது. பொழுதுபோக்கு மற்றும் கேமிங் பயனர்களுக்கு ஏற்றது. இதன் விலை ரூ. 40,531.
லெனோவோ ஐடியா பேட் 3
லெனோவோ ஐடியா பேட் 3 மடிக்கணினியானது 11வது தலைமுறை இன்டல் கோர் ஐ3 புராசஸர் உடையது. 8GB உள்நினைவகம் மற்றும் 512GB நினைவகம் கொண்டது. 15.6 அங்குல முழு எச்.டி. தொடுதிரை கொண்டது. வின்டோஸ் 11 இயங்குதளம், மைக்ரோசாஃப் 2021 தரவிரக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் எடை 1.7 கிலோ. பிளாட்டினம், சாம்பல் நிறங்களில் வரும் இந்த மடிக்கணினியின் விலை ரூ. 37,380.
லெனோவோ ஐடியா பேட் ஸ்லிம் 1
லெனோவோ ஐடியா பேட் ஸ்லிம் 1 மடிக்கணினி, ஏஎம்டி 5 ஆம் தலைமுறை 3500U புராசஸர் உடையது. 8GB உள்நினைவகம் மற்றும் 512GB நினைவகம் கொண்டது. 15.6 அங்குல எச்.டி. திரை கொண்டது. விண்டோஸ் 11 இயங்குதளம், மைக்ரோசாஃப் 2021 இதில் உள்ளது.
மிகவும் மெலிதாக உள்ள இந்த மடிக்கணினியின் எடை 1.6 கிலோ. இதன் விலை ரூ. 38,799.
டெல் மாடல் 5420
டெல் நிறுவனத்தின் மாடல் 5420 மடிக்கணினி 11வது தலைமுறை இன்டல் கோர் ஐ7 புராசஸர் உடையது. 16GB உள்நினைவகம் மற்றும் 512GB நினைவகம் உடையது. மல்டி டாஸ்கிங், அலுவலக வேலைகளுக்கு இந்த மடிக்கணினி ஏற்றது. இந்த மடிக்கணினி 14 அங்குல எச்.டி. திரை உடையது. சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 39,599.
best laptops under Rs 40,000
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.