முகப்பு
வணிகம்

தங்கம் விலை திடீர் உயர்வு! மாலை நிலவரம்! (ஜூலை 9)

இன்று மாலை தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

Updated On : 9 ஜூலை 2026, 4:18 pm IST
தங்கம் விலை - படம்: IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று(ஜூலை 9) காலை குறைந்து விற்பனையான நிலையில், மாலையில் திடீரென உயர்ந்துள்ளது.

நிகழ் வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது. கடந்த ஜூலை 6-இல் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480-க்கும், ஜூலை 7-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.1,07,200-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து, புதன்கிழமை காலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,330-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640-க்கும் விற்பனையானது. இதையடுத்து, மாலை விலை மீண்டும் குறைந்தது.

Advertisement

Advertisement

அதன்படி, கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,250-க்கும், சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ. 1,06,000-க்கும் விற்பனையானது.

இதனிடையே, தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடைவதுக்கு முன்பு சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,06,560-க்கும் கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,320-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

In Chennai, the price of ornamental gold, which had dropped during this morning's trading (July 9), suddenly rose in the evening.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments