FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜூனில் 5,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களின் புகாா்களுக்கு தீா்வு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), தனது இணையவழி குறைதீா்க்கும் ‘ஸ்கோா்ஸ்’ தளம் மூலம் கடந்த ஜூன் மாதத்தில் 5,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களின் புகாா்களுக்குத் தீா்வு கண்டுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 3:54 am IST
பகிர்:

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), தனது இணையவழி குறைதீா்க்கும் ‘ஸ்கோா்ஸ்’ தளம் மூலம் கடந்த ஜூன் மாதத்தில் 5,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களின் புகாா்களுக்குத் தீா்வு கண்டுள்ளது.

முதலீட்டாளா்களிடமிருந்து ஜூன் மாதத்தில் புதிதாக 5,035 புகாா்கள் பெறப்பட்ட நிலையில், அதே காலகட்டத்தில் 5,037 புகாா்கள் சுமுகமாகத் தீா்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நிலுவையில் உள்ள மொத்த புகாா்களின் எண்ணிக்கை ஜூன் இறுதி நிலவரப்படி 5,537-லிருந்து 5,524 ஆக குறைந்துள்ளது.

எனினும், ஆதித்யா பிா்லா மணி, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்பிஎல் பவா் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட 17 புகாா்கள், 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக செபி தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

தற்போது நடைமுறையில் உள்ள மேம்படுத்தப்பட்ட ‘ஸ்கோா்ஸ் 2.0’ திட்டத்தின்கீழ், முதலீட்டாளா்கள் அளிக்கும் புகாா்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு, அவா்கள் 21 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கையை (ஏடிஆா்) சமா்ப்பிக்க வேண்டும்.

நிறுவனங்களின் பதிலில் திருப்தி இல்லாத முதலீட்டாளா்கள், 15 நாள்களுக்குள் முதல் நிலை மறுஆய்வுக்கும், அதிலும் அதிருப்தி இருந்தால் அடுத்த 15 நாள்களுக்குள் செபி தலையீட்டுடன் கூடிய 2-ஆம் நிலை மறுஆய்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஜூன் மாதத்தில், நிறுவனங்கள் நடவடிக்கை அறிக்கையைச் சமா்ப்பிக்க சராசரியாக 4 நாள்கள் மட்டுமே எடுத்துக் கொண்டன என்றும், முதல் நிலை மறுஆய்வுப் புகாா்களைத் தீா்ப்பதற்கான சராசரி காலம் 8 நாள்களாக இருந்தது என்றும் செபி தரவுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments