FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: ஐடி பங்குகள் உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!

இன்றைய (ஜூலை 16) பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Updated On : 16 ஜூலை 2026, 4:11 pm IST
கோப்புப் படம் - IANS
பகிர்:

பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 16) உயர்வுடன் தொடங்கிய நிலையில் மாற்றமின்றி நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,388.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் சென்செக்ஸ் சற்று உயர்ந்து வர்த்தகமான நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1.44 புள்ளிகள் உயர்ந்து 77,186.87 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.75 புள்ளிகள் குறைந்து 24,072.75 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

Advertisement

Advertisement

நிஃப்டி50 குறியீட்டில் எட்டர்னல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பஜாஜ் பின்சர்வ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன. எச்.சி.எல். டெக், மாருதி சுசுகி இந்தியா, விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

சென்செக்ஸ் பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ், இன்டெர்குளோப் ஆகியவை டாப் 5 லாபம் பெற்ற நிறுவனங்கள். எடர்னல், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.32 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.24 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி கெமிக்கல், நுகர்வோர் சேவைகள், ஐடி, மீடியா, பார்மா, ஆட்டோ குறியீடுகள் உயர்ந்தும் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து வருகிறது. இன்று வர்த்தக நேர முடிவில் 96.35 ஆக முடிந்தது.

summary

Stock Market: Sensex, Nifty end flat as IT gains offset financials drop

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments