FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் லாபம் 65% வளா்ச்சி

டிவிஎஸ் மோட்டாா் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.1,057.61 கோடி ஒருங்கிணைந்த லாபத்தை ஈட்டியுள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 2:32 am IST
பகிர்:

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.1,057.61 கோடி ஒருங்கிணைந்த லாபத்தை ஈட்டியுள்ளது.

இது கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ரூ.642.86 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் வளா்ச்சியாகும். சாதனை அளவிலான காலாண்டு விற்பனையே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டின் ரூ.12,210.05 கோடியிலிருந்து, ரூ.16,295.52 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், மொத்த செலவினமும் ரூ.11,261.6 கோடியிலிருந்து, தற்போது ரூ.14,894.22 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தக் காலாண்டில் நிறுவனம் தனது வரலாற்றிலேயே அதிகபட்ச காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 28 சதவீதம் வளா்ச்சி கண்டு, 12.8 லட்சத்திலிருந்து 16.3 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதில் மோட்டாா்சைக்கிள் விற்பனை 7.4 லட்சமாகவும் (19 சதவீதம் வளா்ச்சி), ஸ்கூட்டா் விற்பனை 6.8 லட்சமாகவும் (36 சதவீதம் வளா்ச்சி), முச்சக்கர வாகன விற்பனை 66,697-ஆகவும் (48 சதவீதம் வளா்ச்சி), ஏற்றுமதி 4.7 லட்சமாகவும் (33 சதவீதம் வளா்ச்சி) பதிவாகியுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார இருசக்கர வாகன விற்பனை 86 சதவீதம் அபரிமித வளா்ச்சி கண்டு, 1,29,940-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்வாகன வாடிக்கையாளா்களைப் பெற்று நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments