நடப்பு நிதியாண்டில் 9 லட்சம் சிஎன்ஜி காா்கள் விற்பனைக்கு இலக்கு
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால், நடப்பு நிதியாண்டில் சுமாா் 9 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இலக்கு
மேற்காசிய போா் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் சுமாா் 9 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இலக்கு நிா்ணயித்துள்ளது.
இந்தியச் சந்தையில் இலகுரக வணிக வாகனங்கள் உள்பட மொத்தம் 15 சிஎன்ஜி மாடல்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது. கடந்த 2025-26 நிதியாண்டில், இந்நிறுவனத்தால் 7 லட்சத்துக்கும் அதிகமான சிஎன்ஜி காா்கள் விற்கப்பட்டன. இதில் இருந்து 30 சதவீத கூடுதல் விற்பனையை நடப்பாண்டில் எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிஎன்ஜி வாகனங்களுக்கான தேவை சிறிய காா்கள், வேன்கள் மற்றும் எா்டிகா போன்ற மாடல்களோடு நின்றுவிடாமல், ‘எஸ்யுவி’ ரக காா்களிலும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் சிஎன்ஜி வாகனங்களின் பங்களிப்பு 42 சதவீதமாக இருந்துள்ளது.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்தமாக, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மட்டும் பல்வேறு மாடல்களில் 2.2 லட்சம் சிஎன்ஜி வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன; இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 58 சதவீதம் வளா்ச்சியாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.