நிதியாண்டின் கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்க கூடிய டாடா சன்ஸ் வாரியம்!
டாடா சன்ஸ் வாரியம், ஆண்டு கணக்குகள் மற்றும் ஈவுத்தொகையை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காக கூடியதாக டாடா சன்ஸ் தெரிவித்தது.
மும்பை: உப்பு முதல் மென்பொருள் வரை தயாரிக்கும் டாடா குழுமத்தின் நிறுவனமான டாடா சன்ஸ் வாரியம், ஆண்டு கணக்குகள் மற்றும் ஈவுத்தொகையை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதற்காக இன்று கூடியதாக நிறுவனம் தெரிவித்தது.
குழுமத் தலைவர் என். சந்திரசேகர், டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடா மற்றும் டாடா அறக்கட்டளைத் துணைத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம், நிறுவனத்தின் தலைமையகமான பாம்பே ஹவுஸில் நடைபெற்றது.
காலை 11 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம், சுமார் 4 மணி நேரம் நீடித்ததாகத் தகவல்கள் வெளியானது.
Advertisement
Advertisement
டாடா அறக்கட்டளை, பல்வேறு நிறுவனங்கள் மூலம் டாடா சன்ஸில் 66 சதவீத பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், நிதியாண்டு 2026-க்கான நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளுக்கு வாரியம் ஒப்புதல் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The Board of Tata Sons, met to review and approve the annual accounts and dividend.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.