FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

குஜராத்தில் விமானத் தயாரிப்பு ஆலை: அதானி, எம்ப்ரேயா் நிறுவனங்கள் இறுதி

பிரேஸிலின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயரும் அதானி குழுமமும், இணைந்து, இந்தியாவில் பிராந்திய போக்குவரத்து விமானங்களுக்கான இறுதி ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை குஜராத்தின் தோலேராவில் அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 18 ஜூன் 2026, 2:52 am IST
பகிர்:

பிரேஸிலின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயரும் அதானி குழுமமும், இணைந்து, இந்தியாவில் பிராந்திய போக்குவரத்து விமானங்களுக்கான இறுதி ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை குஜராத்தின் தோலேராவில் அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் ‘உடான்’ திட்டம் மற்றும் ‘தன்னிறைவு இந்தியா’ கொள்கைக்கு வலுசோ்க்கும் வகையில், பிராந்திய போக்குவரத்து விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக இரு நிறுவனங்களுக்கும் இடையே கடந்த ஜனவரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன் தொடா்ச்சியாக, தற்போது இந்த ஆலைக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது

அகமதாபாத் அருகே அதிநவீன பசுமைத் தொழிற்பேட்டையாக மேம்படுத்தப்பட்டு வரும் தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் இப்புதிய ஆலை அமையவுள்ளது. இந்த ஆலையில் படிப்படியாக உள்நாட்டு தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு, இந்தியாவிலேயே விமானங்கள் முழுமையாக உருவாக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தற்போதைய நிலையில் இந்திய விமானப் படை, அரசு முகமைகள் மற்றும் ‘ஸ்டாா் ஏா்’ போன்ற வணிக விமான நிறுவனங்கள் உள்பட சுமாா் 50 எம்ப்ரேயா் விமானங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments