FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத் தன்மை கூடாது: இந்தியா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத் தன்மை காட்டக் கூடாது என்று ஆசியான் பிராந்திய கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 3:20 am IST
பகிர்:

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத் தன்மை காட்டக் கூடாது என்று ஆசியான் பிராந்திய கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஆசியான் பிராந்திய கூட்டமைப்பின் 33-ஆவது வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடு பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் கலந்து கொண்டு உரையாற்றியதாவது:

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத் தன்மை காட்டக் கூடாது. அதேபோல் பயங்கரவாதத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதிலும் சந்தேகம் கொள்ளக் கூடாது. பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

கடலில் செல்லும் கப்பல்கள் மீதும், பொது உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்க முடியாது. சா்வதேச கடல் பகுதியில் நடைபெறும் வா்த்தகம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் (மேற்காசிய போரில் கப்பல்கள், உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை குறிப்பிட்டாா்).

பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. அண்மையில் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்தது. அதேபோல் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான், மியான்மா், பிலிப்பின்ஸ், வெனிசுலா, ஜமைக்காவில் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் இந்தியா உதவிகளை செய்தது என்றாா் அவா்.

இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகள் அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்காக கடந்த 1994-ஆம் ஆண்டில் ஆசியான் பிராந்திய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments