இந்தியப் போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல்: வெளியுறவுத் துறை கண்டனம்!
அரபிக்கடல் பகுதியில் இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதிய சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் பகுதியில் இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதிய சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலின் வடக்கே சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் நேற்று (செப். 15) மாலை வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, அப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பாதுகாப்பற்ற முறையில் அதிவேகத்தில் வந்த பாகிஸ்தான் கடற்படை கப்பல், இந்திய போர்க்கப்பல் மீது மோதியது. இந்த விபத்தில் கப்பலில் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்புத் தூதரை அழைத்த இந்திய வெளியுறவுத் துறை இந்தச் சம்பவம் தொடர்பாக அவரிடம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து பற்றி இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில்,
”1. இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதியது ஏற்றுக்கொள்ள முடியாதது. பாகிஸ்தான் கடற்படையின் இந்த தொழில்முறையற்ற செயல்பாடு குறித்து பாகிஸ்தான் தூதரிடம் கடும் கண்டணம் தெரிவிக்கப்பட்டது.
2. சர்வதேசக் கடல் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை. 'ராணுவப் பயிற்சிகள், ஒத்திகைகள் மற்றும் படைகளின் நடமாட்டம் குறித்த முன்கூட்டிய அறிவிப்பு' தொடர்பாக இந்தியா மற்று பாகிஸ்தான் இடையே 1991 ஏப்ரலில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய செயல்பாடு அந்த ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை நேரடியாக மீறுவதாக அமைந்திருந்தது.
3. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், அனைத்து ராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் விதிமுறைகளை மதித்து நடப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவிக்க பொறுப்புத் தூதரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இந்தச் சம்பவம் தொடர்பாக கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பொறுப்புத் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
The Indian Ministry of External Affairs has condemned the incident in which a Pakistani ship collided with an Indian warship in the Arabian Sea.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.