FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் பெசெஷ்கியன் இந்தியா வந்தடைந்தார்!

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று இந்தியா வந்தடைந்தார்.

11 செப்டம்பர் 2026, 4:14 pm IST
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று இந்தியா வந்தடைந்தார். - ANI
பகிர்:

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று இந்தியா வந்தடைந்தார்.

தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாடு சனிக்கிழமை(செப்.12) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் சனிக்கிழமை தொடங்கும் இரண்டு நாள் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

Advertisement

Advertisement

உணவு, எரிசக்தி, சுகாதாரம், பேரிடர் குறைப்பு மற்றும் முக்கியமான விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றில் கூட்டுத் திறனை மேம்படுத்துவதில் இந்தமாநாடு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிதறிய புவிசார் அரசியல் சூழலைக் கையாள்வதில் இந்த அமைப்பை ஒரு பயனுள்ள சக்தியாக இந்தியா முன்னிறுத்துகிறது.

ரஷியா-உக்ரைன் போரின் பாதிப்புகள், மேற்கு ஆசிய நெருக்கடி (குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை முடக்க நிலை) மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகம் மற்றும் சுங்கவரி கொள்கைகள் ஆகியவற்றால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் புது தில்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஒட்டுமொத்த உறவுகளை மேம்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று இந்தியா வந்தடைந்தார்.

ஈரான் அதிபராக பெசெஷ்கியன் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அதேபோல, கடந்த 8 ஆண்டுகளில் ஈரான் அதிபர் இந்தியா வருவதும் இதுவே முதல்முறை.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை விதித்துள்ளதால், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அவரது இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் அதிபர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளார்.

summary

Iranian President Masoud Pezeshkian arrived in India today to participate in the 18th BRICS summit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments