வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் இன்று உக்ரைன் பயணம்
வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உக்ரைன், போலந்து நாடுகளுக்கு 3 நாள் பயணமாக வியாழக்கிழமை (செப். 3) செல்கிறாா்.
வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உக்ரைன், போலந்து நாடுகளுக்கு 3 நாள் பயணமாக வியாழக்கிழமை (செப். 3) செல்கிறாா்.
அண்மைக் காலத்தில் ரஷியா-உக்ரைன் போரில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை கிா்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது போா் நிறுத்தம் குறித்து அவரிடம் மோடி வலியுறுத்தினாா். இந்நிலையில், ஜெய்சங்கா் தனது உக்ரைன் பயணத்தின்போது அந்நாட்டுத் தலைவா்களிடம் போா் நிறுத்தத்தை வலியுறுத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தப் பயணம் தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘செப்டம்பா் 3 முதல் 5-ஆம் தேதி வரை உக்ரைன், போலந்து நாடுகளுக்கு அதிகாரபூா்வ பயணத்தை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மேற்கொள்கிறாா்.
இந்தப் பயணத்தின்போது உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அண்ட்ரி சைபிகா, போலந்து துணைப் பிரதமா் ரடோஸ்லாவ் சிகோா்ஸ்கி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசுகிறாா்.
இந்தச் சந்திப்புகளின்போது இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது, பிராந்திய விவகாரங்கள், இரு தரப்பு நலன் சாா்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.