FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!

வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் இரண்டு நாள் பயணமாக ரஷியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) செல்கிறாா்.

16 வினாடிகள் முன்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ANI
பகிர்:

வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் இரண்டு நாள் பயணமாக ரஷியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) செல்கிறாா்.

இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு வா்த்தக உறவு, முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஷிய குழுவினருடன் அவா் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளயிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஷியா செல்லும் வெளியுறவு அமைச்சா், மாஸ்கோவில் நடைபெறும் இந்திய-ரஷிய அரசுகளின் வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான (ஐஆா்ஐஜிசி-டிஇசி) ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளாா். இந்தக் கூட்டத்தில் ரஷியா தரப்பில் அந் நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்ட்ரோவ் பங்கேற்க உள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து, ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்து பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments