4வது காலாண்டில் ரூ. 64 கோடி லாபம் ஈட்டிய க்வெஸ் கார்ப்!
க்வெஸ் கார்ப், மார்ச் வரையான காலாண்டில் ரூ. 64.34 கோடி ஒருங்கிணைந்த லாபம் ஈட்டியிருந்தது.
மும்பை: பணியாளர் மற்றும் மனிதவளத் தீர்வுகள் வழங்கும் நிறுவனமான க்வெஸ் கார்ப், மார்ச் வரையான காலாண்டில் ரூ. 64.34 கோடி ஒருங்கிணைந்த லாபம் ஈட்டியிருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நிறுவனம் ரூ. 95.44 கோடி நஷ்டத்தை சந்தித்தது.
செயல்பாட்டு வருவாய், முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 3,656.42 கோடியாக இருந்த நிலையில், மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் இது 6.45 சதவீதம் அதிகரித்து ரூ. 3,892.45 கோடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
நிறுவனம், ஆண்டுக்கு ஆண்டு 19 சதவீதம் அதிகரித்து ரூ. 312 கோடி ஈபிட்டா (EBITDA) ஈட்டியது மற்றும் ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம் அதிகரித்து ரூ. 230 கோடி நிகர லாபத்துடன் வலுவாக நிறைவு செய்தது.
பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ. 3 சிறப்பு இடைக்கால ஈவுத்தொகை மற்றும் ஒரு பங்குக்கு ரூ. 3 இறுதி ஈவுத்தொகை வழங்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
Quess Corp has posted a consolidated profit of Rs 64.34 crore during the March quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.