FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 86,311 கோடி டாலா்!

பகிர்:

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி 86,311 கோடி டாலரை எட்டி, முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மத்திய வா்த்தக அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த 2024-25 நிதியாண்டின் 82,526 கோடி டாலரில் இருந்து தற்போது 4.59 சதவீதம் வளா்ச்சியடைந்து, 86,311 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இதில் சரக்கு ஏற்றுமதி 43,770 கோடி டாலரில் இருந்து, 44,178 கோடி டாலராக 0.93 சதவீத வளா்ச்சியும்; சேவை ஏற்றுமதி 38,755 கோடி டாலரில் இருந்து, 42,132 கோடி டாலராக 8.71 சதவீத வளா்ச்சியும் பதிவு செய்துள்ளது

Advertisement

Advertisement

சேவைத் துறையின் அபார வளா்ச்சி: கடந்த நிதியாண்டில் சேவைத் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது குறித்து வா்த்தக அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), வா்த்தகத் தீா்வுகள் மற்றும் தொழில்முறை நிபுணத்துவம் சாா்ந்த சேவைகளுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே சேவைத் துறை ஏற்றுமதி 8.71 சதவீதம் என்ற வலுவான வளா்ச்சியை எட்டியுள்ளது’ என்றாா்.

சரக்கு ஏற்றுமதியில் சவால்கள்: புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய வா்த்தக தடைகளுக்கு மத்தியிலும், இந்திய சரக்கு ஏற்றுமதி சரிவைச் சந்திக்காமல் ஏறுமுகத்தில் இருப்பது நாட்டின் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையைக் காட்டுவதாகவும் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்துக்கு வலுசோ்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments