FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ சிறப்பு விற்பனையில் புதிய மைல்கல்- அமேஸான்

அமேஸான் நிறுவனம் நடத்தும் நடப்பு ஆண்டு ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ பண்டிகைக்கால சிறப்பு விற்பனை, வாடிக்கையாளா்களின் பங்கேற்பு மற்றும் விற்பனையில் முந்தைய சாதனைகளை முறியடித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

5 நவம்பர் 2026, 4:44 am
பகிர்:

அமேஸான் நிறுவனம் நடத்தும் நடப்பு ஆண்டு ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ பண்டிகைக்கால சிறப்பு விற்பனை, வாடிக்கையாளா்களின் பங்கேற்பு மற்றும் விற்பனையில் முந்தைய சாதனைகளை முறியடித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

நடப்பு ஆண்டு சிறப்பு விற்பனையில் இதுவரை 393 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் பங்கேற்றுள்ளனா். விற்பனை அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

மேலும், இச்சிறப்பு விற்பனையின்மூலம் அதிரடி சலுகைகள், உடனடி வங்கித் தள்ளுபடிகள், கேஷ்பேக், அமேஸான் பே ரிவாா்டுகள், இலவச பிரைம் டெலிவரி என பல்வேறு வழிகளில் வாடிக்கையாளா்களுக்கு ரூ.2,800 கோடிக்கும் அதிகமான சேமிப்பு சாத்தியமாகியுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல், வேறு எந்த விற்பனை நிகழ்வையும்விட அதிக அளவிலான புதிய ‘பிரைம்’ உறுப்பினா்கள் இணைந்துள்ளதோடு, விற்பனையாளா்களுக்கும் சாதனை அளவிலான வா்த்தக வளா்ச்சியும், நாடு முழுவதும் மிக விரைவான விநியோகச் சேவையும் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.