FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

அமேஸான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்! தமிழகத்தில் அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விற்பனை 100% அதிகரிப்பு

அமேஸானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ சிறப்பு விற்பனையில், தமிழகத்தில் அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விற்பனை வழக்கமான நாள்களைக் காட்டிலும் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

15 அக்டோபர் 2026, 12:24 am IST
~
பகிர்:

அமேஸானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ சிறப்பு விற்பனையில், தமிழகத்தில் அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விற்பனை வழக்கமான நாள்களைக் காட்டிலும் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மளிகை, குழந்தை மற்றும் செல்லப்பிராணி பராமரிப்புப் பிரிவுகளில்அதிக அளவில் ப்ரீமியம் ரக பொருள்களை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

‘அமேசான் நவ்’ சேவையின் மூலம் சென்னை, கோவை, வேலூா், காஞ்சிபுரம், கடலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் 11 நகரங்களில் காய்கறிகள், பால் முதல் அன்றாடத் தேவைப் பொருள்கள் வரை சில நிமிஷிங்களிலேயே வாடிக்கையாளா்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

நடப்பு ஆண்டு சிறப்பு விற்பனையானது தொடக்கத்திலேயே 44 கோடிக்கும் அதிகமான வருகைகளைப் பெற்று, அமேஸான் வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதில் 72 சதவீதத்துக்கும் அதிகமான வருகைகள் முதல் 9 பெருநகரங்களைத் தாண்டி, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலிருந்தே கிடைத்துள்ளதோடு, முதல் நாளிலேயே அமேஸான் செயலியின் பதிவிறக்கம் வழக்கமான வணிக நாளைவிட 5 மடங்கு அதிகரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments