டாபர் நிறுவனத்தின் Q2 லாபம் 12% உயர்வு!
டாபர் இந்தியா அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.09 சதவீதம் அதிகரித்து ரூ. 498.57 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
புதுதில்லி: உள்நாட்டு நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான டாபர் இந்தியா லிமிடெட், நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.09 சதவீதம் அதிகரித்து ரூ. 498.57 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ. 444.79 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், செயல்பாடுகள் மூலம் கிடைத்த அதன் வருவாய் கடந்த ஆண்டின் 2வது காலாண்டிலிருந்த ரூ.3,191.32 கோடியிலிருந்து 11.64 சதவீதம் அதிகரித்து ரூ.3,563.07 கோடியாக உயர்ந்துள்ளது.
நிறுவனம் தொடர்ச்சியாக 2வது காலாண்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது. செப்டம்பர் முடிய உள்ள காலாண்டில் மொத்த செலவுகள் ரூ. 3,089.14 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும். இதர வருமானத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம், நிதியாண்டின் 2வது காலாண்டில் 12.11 சதவீதம் அதிகரித்து ரூ. 3,734.96 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
இதற்கிடையில், நிதியாண்டின் 2வது காலாண்டில், டாபர் இந்தியாவின் ஒருங்கிணைந்த வருமானம் 11.51 சதவீதம் அதிகரித்து ரூ. 7671.91 கோடியாக இருந்தது.
டாபர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில், பங்கு ஒன்றுக்கு ரூ. 394.10 ஆக இருந்தது.