91% மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு 5%-க்கும் குறைவாகவே ஊதிய உயர்வு!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 91% ஊழியர்களுக்கு 5% அல்லது அதற்கும் குறைவாகவே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து...
இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 91% ஊழியர்களுக்கு 5% அல்லது அதற்கும் குறைவாகவே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிடத் தள தரவுகளை ஒருங்கிணைக்கும் பிளிண்ட் நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த காலாண்டில் நல்ல லாபத்தை ஈட்டியிருந்தாலும், நிறுவனத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஊழியர்களை உலகளவில் பணிநீக்கம் செய்தது.
இதுமட்டுமின்றி பிளிண்ட் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவைச் சேர்ந்த 2,178 ஊழியர்களுக்கு நிறுவனத்தின் வளர்ச்சிக்கேற்ற ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே அதாவது, 5% அல்லது அதற்கும் குறைவாகவே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
2026 ஆம் ஆண்டில் 5% ஊழியர்கள் மட்டுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 27% குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் 45% ஊழியர்கள் 5% அல்லது அதற்கும் குறைவான ஊதிய உயர்வைப் பெற்றிருந்தனர். குறைவான ஊதிய உயர்வு வழங்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.