தீபாவளியை முன்னிட்டு சிறப்பு முகூர்த்த நேர வர்த்தகம் அறிவிப்பு!
தீபாவளியை முன்னிட்டு, பங்குச் சந்தை விடுமுறை நாளாக இருந்தாலும், நவம்பர் 8 அன்று சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்விற்காகத் திறந்திருக்கும்.
மும்பை: தீபாவளியை முன்னிட்டு, பங்குச் சந்தை விடுமுறை நாளாக இருந்தாலும், நிஃப்டி மற்றும் மும்பை பங்குச் சந்தை நவம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்விற்காகத் திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை வழக்கமான சந்தை விடுமுறை நாளாக இருந்தபோதிலும், இந்த அமர்வு பிற்பகல் 2:20 மணி முதல் 3:30 மணி வரை நடைபெறும்.
கடந்த ஆண்டு, சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்வு மதியம் 1:45 மணி தொடங்கி 2:45 மணி வரை நடைபெற்றது என பங்குச் சந்தை தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement