கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: ஏற்றத்துடன் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!
சென்செக்ஸ் 107.25 புள்ளிகள் உயர்ந்து 81,106.65 புள்ளிகளாகவும், நிஃப்டி 58.25 புள்ளிகள் உயர்ந்து 25,044.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் வங்கி, நிதித்துறைப் பங்குகளில் ஏற்பட்ட கொள்முதல் காரணமாக, பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செகஸ் 340.01 புள்ளிகள் உயர்ந்து 81,339.41 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 107.25 புள்ளிகள் உயர்ந்து 81,106.65 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 58.25 புள்ளிகள் உயர்ந்து 25,044.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிரெண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எச்.சி.எல் டெக், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
Advertisement
Advertisement
கடந்த வாரம், பிஎஸ்இ குறியீடு 6,568.49 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 1,977.25 புள்ளிகள் அதிகரித்தது.
பதஞ்சலி ஃபுட்ஸ் பங்குகள் வர்த்தக இறுதி அமர்வில் 2.24% உயர்ந்து ரூ. 426.35 ஆகவும், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 1.56 சதவீதம் சரிந்து ரூ. 1,064.85 ஆகவும், ஐடிசி 1.45 சதவீதம் சரிந்து ரூ. 279.35 ஆகவும், கிராசிம் 1.22 சதவீதம் சரிந்து ரூ. 3,168.20 ஆகவும், டெக் மஹிந்திரா 1.80 சதவீதம் சரிந்து ரூ. 1,796.90 ஆகவும், இன்ஃபோசிஸ் 1.80 சதவீதம் சரிந்து ரூ. 1,150.50 ஆகவும், மேக்ஸ் ஹெல்த்கேர் 1.19 சதவீதமும் மற்றும் எடர்னல் பங்குகள் 1.15 சதவீதம் சரிந்தன.
டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் 1.09 சதவீதம் உயர்ந்து ரூ. 1,385 ஆகவும், மாருதி சுஸுகி 0.88 சதவீதம் உயர்ந்து ரூ. 12,928 ஆகவும், ஹிண்டால்கோ 0.73 சதவீதம் உயர்ந்து ரூ. 960 ஆகவும், அப்போலோ மருத்துவமனை 0.66 சதவீதம் உயர்ந்து ரூ. 8,485.50 ஆக இருந்தது.
சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பங்குகள் 2.18% உயர்ந்து ரூ. 19,024.00 ஆகவும், ஃபெடரல் வங்கி பங்குகள் வர்த்தக இறுதி அமர்வில் 2.20% உயர்ந்து ரூ. 344.10 ஆகவும், லார்சன் & டூப்ரோ 1.82 சதவீதம் உயர்ந்து ரூ. 4,185 ஆகவும், எச்.டி.எஃப்.சி வங்கி 1.75 சதவீதம் உயர்ந்து ரூ. 797.80 ஆகவும் இருந்தது. வங்கிப் பங்குகளின் உயர்வுக்கு வலிமைஅளிக்கும் வகையில் ஐசிஐசிஐ வங்கி 1.53 சதவீதம் உயரந்து ரூ. 1,589 ஆக இருந்தது.
நிஃப்டி-யில் டாடா ஸ்டீல் 2.81 சதவீதம் சரிந்து ரூ. 184.85 ஆகவும் எச்.சி.எல் டெக் பங்குகள் 2.64 சதவீதம் சரிந்து ரூ. 1,404 ஆகவும், அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் 2.40 சதவீதம் சரிந்து ரூ. 12,199 ஆகவும் இருந்தது.
ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் உயர்வுடன் முடிவடைந்தன. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகள் சரிவுடன் நிலைபெற்றது.
ஐரேப்பிய சந்தை உயர்ந்து வர்த்தகமான நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தை நேற்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.
ஏழு நாள் ஏற்றத்திற்குப் பிறகு லாபத்தை ஈட்டும் போக்கு காரணமாக, நேற்று நடைபெற்ற தீபாவளி சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்வில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சிறிதளவு சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.04 சதவீதம் சரிந்து 97.46 அமெரிக்க டாலராக உள்ளது.