FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: உயர்வுடன் சென்செக்ஸ், நிஃப்டி வர்த்தகம்!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

- பிரதிப் படம்
பகிர்:

கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (நவ. 5) காலை 74,199.69 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 9.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1682.34 புள்ளிகள் (1.84%) உயர்ந்து 78,983.74 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 480.10 புள்ளிகள் (2%) உயர்ந்து 24,440.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி50 குறியீட்டில் , ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 6.35 சதவிகிதம் உயர்ந்து, அதிக லாபம் ஈட்டிய பங்குகளில் முதலிடம் பிடித்தது. தொடர்ந்து இண்டிகோ (5.39%), ஏசியன் பெயிண்ட்ஸ் (4.56%), டாடா மோட்டார்ஸ் பிரெஃபர்டு வேரியன்ட் (4.13%), மாருதி சுசூகி (4.06%) ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா சரிந்து 94.55 ஆகத் தொடங்கியுள்ளது.

summary

Sensex jumps 1,403.71 points to 78,689.87 in early trade; Nifty surges 378.85 points to 24,340.40

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.