FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளியன்று யுபிஐ பரிவர்த்தனை 32% அதிகரிப்பு!

பண்டிகை கால கொள்முதல் காரணமாக, யுபிஐ மூலமான பண பரிவர்த்தனை அளவு 32% அதிகரித்துள்ளது.

57 வினாடிகள் முன்பு
யுபிஐ பரிவர்த்தனை - கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: பண்டிகை கால கொள்முதல் காரணமாக, யுபிஐ மூலமான பண பரிவர்த்தனை அளவு 32% அதிகரித்துள்ளது.

தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு இதே நாளில் 69.57 கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனையின் அளவு, நவம்பர் 8 தேதியன்று 91.69 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

தீபாவளிக்கு முந்தைய நாள், பரிவர்த்தனைகளின் அளவு 97.58 கோடியாக இருந்தது, இதன் விளைவாக ரூ. 1,36,118 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது.

கடந்த மாதம், யுபிஐ பரிவர்த்தனைகள் 2,547 கோடி ரூபாயை எட்டியது. அதே சமயம், பண்டிகைக் கால கொள்முதல் காரணமாக, அக்டோபர் மாதம் இது 31.53 லட்சம் கோடியாக இருந்தது.

2016 ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்ட யுபிஐ, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரிவர்த்தனை மதிப்பு, 2016-17 நிதியாண்டில் ரூ.0.07 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் சுமார் ரூ.314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் 4,000 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியாகும்.

summary

Transactions through UPI witnessed a 32 per cent surge in volume terms on Diwali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.