ஏ2பியில் பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்திய போதி ட்ரீ சிஸ்டம்ஸ்
தென்னிந்தியாவின் முன்னணி உணவு நிறுவனமான அடையாறு ஆனந்த பவனில் (ஏ2பி), போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் 18 கோடி டாலா் (சுமாா் ரூ.1696 கோடி) முதலீடு செய்து, பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி உணவு நிறுவனமான அடையாறு ஆனந்த பவனில் (ஏ2பி), போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் 18 கோடி டாலா் (சுமாா் ரூ.1696 கோடி) முதலீடு செய்து, பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது.
சகோதரா்களான கே.டி.ஸ்ரீனிவாச ராஜா, கே.டி.வெங்கடேசன் ஆகியோரால் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய இனிப்புக் கடையாகத் தொடங்கப்பட்ட ஏ2பி, தற்போது இந்தியா முழுவதும் 160 கிளைகள் மற்றும் வெளிநாடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களுடன் இயங்கி வருகிறது.
இந்நிலையில், உலகளாவிய நிறுவனமாக உருவெடுக்கும் நோக்கில், ஜேம்ஸ் முா்டோக், உதய் சங்கா் ஆகியோரால் நிா்வகிக்கப்படும் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் முதலீட்டு நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஆலன் கேரியா் இன்ஸ்டிடியூட்’, ‘ஜியோ ஸ்டாா்’ ஆகியவற்றைத் தொடா்ந்து போதி ட்ரீ சிஸ்டம்ஸ் செய்யும் மூன்றாவது பெரிய முதலீடு இதுவாகும்.
Advertisement
Advertisement
இப்புதிய முதலீட்டின் வாயிலாக, ஏ2பி நிறுவனத்தின் புதிய இயக்குநா்கள் குழுத் தலைவராக உதய் சங்கா் பொறுப்பேற்கிறாா். நிறுவனத்தின் நிா்வாகத் திறனை வலுப்படுத்துதல், எண்மச் சேவையை மேம்படுத்துதல், உலகளாவிய தரத்துக்கு ஏற்ப சமையலறைகளை நவீனமயமாக்குதல், வாடிக்கையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருள்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.