FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் புதிய கிளை திறப்பு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தனது ‘வளா்ந்து வரும் வணிக’ பிரிவு கிளையைப் புதிதாக திறந்துள்ளது.

7 வினாடிகள் முன்பு
பகிர்:

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தனது ‘வளா்ந்து வரும் வணிக’ பிரிவு கிளையைப் புதிதாக திறந்துள்ளது.

மன்னாா்குடியைத் தொடா்ந்து பொன்னமராவதியில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கிளையின் மூலம், மத்திய தமிழ்நாட்டில் மணப்பாறை, அறந்தாங்கி, துறையூா், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இந்நிறுவனத்தின் கிளைகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது.

வளா்ந்து வரும் வணிகப் பிரிவின்கீழ், சிறு தொழில்முனைவோருக்கான ரூ.20 லட்சம் வரையிலான செயல்பாட்டு மூலதனக் கடன்களும், ரூ.40 லட்சம் வரையிலான மலிவு விலை வீட்டு வசதிக் கடன்களும் வழங்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement